மனைவிக்கு தீ வைத்த கணவன் கைது
மனைவிக்கு தீ வைத்த கணவன் கைது
சிலாபம் – அம்பகந்தவில பகுதியில் மனைவியை, கணவன் தீ வைத்து எரித்த சம்பவம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
அம்பகந்தவில பகுதியை சேர்ந்த 39 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
மனைவிக்கு தகாத உறவு இருப்பதாக சந்தேகித்து இருவருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதால் குறித்த கணவர் தனது மனைவியை தீ வைத்து எரித்துள்ளார்.
குறித்த மனைவி சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று புதன் கிழமை உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் கணவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News