மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு

-நானுஓயா நிருபர்-

மலையக பகுதியில் பெய்தும் வரும் அடை மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு இன்று புதன் கிழமை காலை முதல் திறக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் இயற்கையாகவே வான் பாய்வதுடன் மேலதிக நீர் வெளியேற்ற வாயில்களை சிறிய அளவில் திறக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், நீர்மட்டத்தை குறைக்க வாயில்களை மேலும் திறக்க வேண்டியது அவசியமாக உள்ளது என நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.

மேலும் மேல் கொத்மலை நீர்த்தேக்க அணைக்கட்டுக்கு கீழே கொத்மலை ஓயாவின் இருபுறங்களிலும் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுளனர்.

மேல் கொத்மலை நீர்தேக்க பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், சென் கிளயார் மற்றும் டெவோன் நீர்வீழ்ச்சிகளில் இருந்து வெளியேறும் நீரும் அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News