பேருந்து – லொறியுடன் மோதியதில் 9 பேர் காயம்
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை குழுத்தலைவராக துரைராசா தனராஜ் முன்மொழிவு
மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்று வெல்லம்பிட்டி வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் 9 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெல்லம்பிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் மிதொடமுல்ல சந்திக்கும் இடையிலான வீதியோரத்தில் அமைந்துள்ள ஒரு வன்பொருள் நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று லொறிகள் இரவு நேரத்தில் குறித்த நிறுவனத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று புதன்கிழமை காலை அதிவேகமாக வந்த பேருந்து, லொறியுடன் மோதியுள்ளது.
இதனால் நிறுத்தப்பட்டிருந்த ஏனைய லொறிகளும் ஒன்றுடன் ஒன்று மோதி நான்கு வாகனங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.