பொதுமன்னிப்புக்கான நிபந்தனைகளை கடுமையாக்குவதற்கு தீர்மானம்
இலங்கையில் தேசிய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு வழங்கப்படும் ஜனாதிபதியின் பொதுமன்னிப்புக்கான நிபந்தனைகளை, இனிவரும் காலங்களில் நீதி அமைச்சு கடுமையாக்கும் என்று நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பொது மன்னிப்பின் கீழ் கைதிகளை விடுவிப்பதில் அண்மையில் கண்டறியப்பட்ட முறைகேடுகளைக் கருத்திற் கொண்டு இந்த செயற்பாடு நடைமுறைக்கு வரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர தினம், விசாக பூரணை மற்றும் கிறிஸ்மஸ் போன்ற நிகழ்வுகளின் போது, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் சிறைக்கைதிகள் விடுவிக்கப்படுகின்றமை வழமையாகும் எனக் கூறினார்.
மேலும் இதற்காக, சிறை அதிகாரிகளால் விடுவிக்கப்பட வேண்டிய கைதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான அளவுகோலை நீதி அமைச்சு உருவாக்குகிறது.
எனினும், எதிர்காலத்தில் கைதிகளை விடுவிப்பதற்கான புதிய அளவுகோல்களை உருவாக்க ஒரு குழுவை நியமிக்கவுள்ளதாக நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News