பாடசாலை மாணவர்களுக்குப் போதை மாத்திரைகளை வழங்கிய வர்த்தகர் கைது
பாடசாலை மாணவர்களுக்குப் போதை மாத்திரைகளை வழங்கிய வர்த்தகர் கைது
யாழ் – சாவகச்சேரி நகரில் பாடசாலை மாணவர்களுக்குப் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த வர்த்தகரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த வர்த்தகரைக் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன், சந்தேகநபரிடமிருந்து 330 போதை மாத்திரைகளையும் பொலிஸார் கைப்பற்றினர்.
குறித்த நபரும் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.