ஹொரணையில் AI மூலம் சக மாணவிகளின் ஆபாச படங்கள் வீடியோக்களை உருவாக்கிய மாணவர்கள்!
செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தி மாணவிகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கிய இரண்டு பாடசாலை மாணவர்களை, ஜூன் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க, ஹொரணை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர்கள், மாணவிகளின் முகங்களைப் பயன்படுத்தி, இந்த AI வீடியோக்கள் மற்றும் படங்களை உருவாக்கி பாடசாலை வட்ஸ்அப் குழுக்களில் பரப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள், இந்த ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவிகள் என தெரிய வந்தள்ளது.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, இருவரையும் சிறைச்சாலை சிறுவர் புனர்வாழ்வு மையத்தில் வைக்குமாறு ஹொரணை நீதவான் சந்தன கலன்சூரிய உத்தரவிட்டார்.
ஒரு மாணவியின் தந்தை குறித்த ஆபாச படத்தைப் பார்த்து பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்ததை அடுத்து, குறித்த இரண்டு மாணவர்களும் கைது செய்யப்பட்டதாக, நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
