பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து : மூவர் வைத்தியசாலையில் -வீடியோ இணைப்பு-

-நானுஓயா நிருபர்-

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து : மூவர் வைத்தியசாலையில் -வீடியோ இணைப்பு-

நுவரெலியா – உடப்புசல்லாவ பிரதான வீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நுவரெலியா உடப்புசல்லாவ பிரதான வீதியில் இராகலை புரூக்சைட் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் இதில் ஒரு சிறுவர் ஒரு பெண் மற்றும் வேனின் சாரதி ஆகியோர் அடங்குவதாக விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News