
ஐபோன்களில் இனிமேல் யூடிப் பார்க்க முடியாது
ஐபோன்களில் இனிமேல் யூடிப் பார்க்க முடியாது
மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் வீடியோ செயலியான யூடிப் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சில வகை அலைபேசிகளுக்கு யூடிப் செயலியை பயன்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக , ஐபோன் ஐ போன் பயனர்களுக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சி செய்தியாக அமைந்துள்ளது.
யூடிப் இப்போது iOS 16 அல்லது அதற்கும் மேல் காணப்படும் அலைபேசிகளிலேயே செயலியை இயக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பின்வரும் ஐபோன்களில் இனி யூடிப் பார்வையிட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
• iPhone 6s
• iPhone 6s Plus
• iPhone 7
• iPhone 7 Plus
• முதலாம் தலைமுறை iPhone SE
• iPod Touch 7
• iPad Air 2
• iPad mini 4 இவை iOS 15ஐ விட மேலே அப்டேட் செய்ய முடியாத சாதனங்கள் என்பதால்தான் இவற்றில் யூடியூப் பயன்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. YouTube செயலியின் புதிய பதிப்பு 20.22.1, ஜூன் 2-ஆம் திகதி வெளியிடப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News