
மட்டக்களப்பு வவுனதீவு பகுதியில் விபத்து: ஒருவர் பலத்த காயம்
மட்டக்களப்பு வவுனதீவு பகுதியில் விபத்து: ஒருவர் பலத்த காயம்-Batticaloa News
மட்டக்களப்பு வவுனதீவு பகுதியில் இன்று பகல் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி ஒருவர் பலத்த காயமடைந்து வைதத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாவற்காடு கிராமத்திற்கும் மங்கிக்கட்டு கிராமத்திற்கும் இடைப்பட்ட கரவெட்டி வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
நாவற்காட்டை சேர்ந்த இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில் அவர்களில் ஒருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனதீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.