திருகோணமலையில் மீனவர்கள் போராட்டம்
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலையில் மீனவர்கள் போராட்டம்
திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியை மறித்து திருக்கடலூர் பிரதேச மீனவர்கள் இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் வாழைச்சேனை கடற்பரப்பில் மீனவர்களையும் படகையும் சேதத்துக்கு உள்ளாக்கி தாக்கியவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது ஒரு சில மணி நேரம் அப்பகுதியூடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
மேலும் மீனவனின் உயிருக்கு உத்தரவாதம் இல்லையா? மீனவனின் நிலமையை பார் உட்பட பல பதாகைகளை ஏந்தியவாறு மீனவர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News 24