அநுராதபுரத்தில் அறுவருக்கு கொரோனா தொற்று: ஒருவர் மரணம்
அநுராதபுரத்தில் அறுவருக்கு கொரோனா தொற்று: ஒருவர் மரணம்
மே மாதத்தில் அநுராதபுரத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாகவும் தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் தேஜனா சோமதிலக நேற்று புதன் கிழமை தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம், சாலியவத்தையைச் சேர்ந்த 61 வயதுடைய ஒருவர் ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக வைத்தியர் தேஜனா சோமதிலக தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் ஏனைய நோயாளிகள் தற்போது வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News 24