விமான நிலைத்தில் போதைப் பொருளுடன் 26 வயது பெண் உட்பட இருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 366 கிராம் குஷ் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் , போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக செயற்பட்ட ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று செவ்வாய்க்கிழமை விமான நிலைய வருகைப் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆண் வெல்லம்பிட்டியவைச் சேர்ந்த 31 வயதுடையவர் எனவும் , பெண் அங்கொடையைச் சேர்ந்த 26 வயதுடையவர் எனவும் தெரியவருகின்றது.
கட்டுநாயக்க பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.