
பேனா வடிவிலான துப்பாக்கியுடன் ஒருவர் கைது
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனா வடிவிலான துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் பாணந்துறை, ஹொரேதுடுவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் கொழும்பு மொரட்டுவை பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனா வடிவிலான துப்பாக்கி மற்றும் மூன்று தோட்டாக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் கொலை திட்டத்திற்காக இந்த துப்பாக்கியை தம்வசம் வைத்திருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பில் களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
