கொழும்பு துறைமுக நகரத்தில் காலை விமானம் தாழ பறக்கும் : பொது மக்களுக்கு அழைப்பு

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் சேவையில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள ஏர்பஸ் ஏ330-200 விமானம் இன்று புதன்கிழமை காலை 8:15 மணி முதல் காலை 9:30 மணி வரை கொழும்பு துறைமுக நகரத்திலிருந்து பாண்டுரா (Port City to Pandura ) வரை குறைந்த உயரத்தில் பறக்கவுள்ளது. பொதுமக்கள் விமானத்தின் தெளிவான காட்சியை அனுபவிக்க முடியும்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தகவல்படி, விமானம் தாழப்பறந்த பின்னர் , கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குத் திரும்பும்.

இந்த சிறப்பு நிகழ்வைக் காண விமான நிறுவனம் பொது மக்களிடம் அழைப்பு விடுத்துள்ளது.