
கிளிநொச்சியில் பெருமளவான கஞ்சா மீட்பு!
-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதநகர் பகுதியில் பாழடைந்த வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட கஞ்சா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலை அடுத்து, கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு பொலிஸ்மா அதிபரின் மேற்பார்வையின் கீழ் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்த பொலிஸ் குழு, மூன்று பொதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை மீட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்
