
பொலிஸாரின் கிளீன் சிறிலங்கா சிரமதானம்
-மூதூர் நிருபர்-
தேசிய சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு மூதூர் திரிசீடி சந்தியிலிருந்து இரால்குழி பாலம் வரையான வீதி இன்று செவ்வாய்கிழமை காலை சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.
கிளீன் சிறிலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மூதூர் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் சிரமதானத்திற்கு மூதூர் பிரதேச சபை,சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை,தேசிய மக்கள் சக்தியின் மூதூர் கிளை,மூதூர் மத்திய கல்லூரி என்பன அனுசரணை வழங்கியிருந்தன.
இவ் சிரமதானப் பணியில் பாடசாலை மாணவர்கள், பொலிஸார்,மூதூர் பிரதேச சபை ஊழியர்கள், தேசிய மக்கள் சக்தியின் மூதூர் கிளை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.











