மறுஅறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் : எச்சரிக்கை !

சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரப் பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் மீனவர் சமூகங்களுக்கு அறிவுறுத்தல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரப் பகுதிகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாகவும், மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“சிலாபம் முதல் கொழும்பு வழியாக காலி வரையிலும், காங்கேசன்துறை முதல் முல்லைத்தீவு வழியாக திருகோணமலை வரையிலும் உள்ள கடற்கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 50-60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்” என்று வானிலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரைப் பகுதிகளில் அலைகளின் உயரம் சுமார் 2.5 மீ – 3.0 மீ வரை அதிகரிக்கக்கூடும். மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அருகிலுள்ள கடல் பகுதிகளில் அலைகள் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது,” என்று தெரிவித்துள்ளது.