
புகையிரதம் மோதி ஒருவர் பலி
-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிளுடன் புகையிரதம் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிர் இழந்துள்ளார்.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொன்னளகு அனுசன்ராஜ் (வயது – 28) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் அமைந்துள்ள புகையிரதத் கடவையினை மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் கடக்க முற்பட்ட போது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட புகையிரதத்தில் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து காரணமாக புகையிரதம் 30 நிமிடங்கள் வரை அப்பகுதியில் தரித்து நின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
விபத்து ஏற்பட்ட பகுதியில் உள்ள புகையிரதக் கடவையில் பொருத்தப்பட்டுள்ள சமிஞ்ஞை முறையாக இயங்குவது இல்லை என பிரதேச மக்கள் விசனம் வெளியிடுகின்றனர்.