இன்றைய ராசிபலன்
மேஷம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வியாபாரத்தில்எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மனசாட்சிபடி செயல்படும் நாள்.
ரிஷபம்
சமயோசிதமாகவும் சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ் கௌரவம் உயரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் புதியவர்கள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லி தருவார். அமோகமான நாள்.
மிதுனம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.
கடகம்
எளிதில் முடிய வேண்டிய விஷயங்களை கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
சிம்மம்
திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையைமாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
கன்னி
குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்கு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். மதிப்புக் கூடும் நாள்.
துலாம்
உங்கள் செயலில் வேகம் கூடும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் அடைவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையை கண்டு மேலதிகாரி வியப்பார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
விருச்சிகம்
குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.
தனுசு
சிக்கலான சவாலான வேலைகளை எல்லாம் கையில் எடுத்துக் கொள்ளாதீர்கள். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. புதிய முயற்சிகள் சிலருக்கு மிகுந்த அலைச்சலுக்குப் பிறகே பலிதமாகும் நாள்.
மகரம்
எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் சகஊழியர்களுடன் விட்டு கொடுத்து போவது நல்லது. தைரியமுடன் செயல்பட வேண்டிய நாள்.
கும்பம்
சோர்வு நீங்கி ,உற்சாகமடைவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். சிந்தனைத்திறன் பெருகும் நாள்.
மீனம்
முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிக்கப் பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் மறைமுகப் பிரச்சினைகள் வரும்.உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பொறுமை தேவைப்படும் நாள்.