ஜனாதிபதி ஜுன் 10 இல் ஜேர்மன் பயணம்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் ஜுன் மாதம் 10 ஆம் திகதி ஜேர்மனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் இந்த சுற்றுப்பயணத்தின் போது ஜேர்மன் ஜனாதிபதியை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.