ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான முதியவர் உயிரிழப்பு!

 

-யாழ் நிருபர்-

யாழில் ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான முதியவர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

இதன்போது சரசாலை தெற்கு, சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த வைத்திலிங்கம் சிவராஜன் (வயது 71) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 16ஆம் திகதி வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றுகொண்டிருந்தார், இதன்போது கொடிகாமம் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் இருந்த சிமெந்தினாலான உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில் மயக்கமடைந்துள்ளார்.

பின்னர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 10.00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.