விபத்தில் ஊடகவியலாளர் உயிரிழப்பு!
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை, ஹபரண வீதியில் கல்வங்கு பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கந்தளாய் பகுதியைச் சேர்ந்த ஊடகவியலாளர் பிரியான் மலிந்த என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரத்தினபுரியில் இருந்து கந்தளாய் நோக்கி பயணித்த போதே குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
உயிரிழந்த நபர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகொரலவின் ஊடகச் செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது
