
தலைமறைவாகியுள்ள டீச்சர் அம்மாவை வலைவீசி தேடும் பொலிஸ் குழுக்கள்!
இளைஞர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய ஆசிரியை ஹயேஷிகா பெர்னாண்டோ இன்னும் தலைமறைவாக உள்ளார் அவரை கண்டு பிடிக்க மூன்று பொலிஸ் குழுக்களை நியமித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தரம் 5 புலமைப்ப்ரிசில் மாணவர்களுக்கு கற்பிக்கும் “டீச்சர் அம்மா” என அமைக்கப்படும் ஆசிரியை ஹயேஷிகா பெர்னாண்டோ கடந்த வாரம் நீர்கொழும்பில் உள்ள இளைஞர் ஒருவரை அவரின் விதைப்பை பகுதியில் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டது.
கட்டான பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை நடத்தி வரும் நிலையில் ஆசிரியை குறித்த இளைஞரின் இடுப்பில் உதைத்ததாகவும் ஆசிரியையின் கணவரும் முகாமையாளலும் இளைஞரை அடித்ததாகவும் தெரியவருகின்றது.
தனது ஊழியர்களில் ஒருவரான இளம் பெண்ணுக்கு கணினி பயிற்சி அளிக்க குறித்த இளைஞனை ஆசிரியை ஹயேஷிகா பெர்னாண்டோ பணிக்கமர்த்தியதாகவும் குறித்த இளைஞன் ஆசிரியையின் ஊழியரான இளம் பெண்ணை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பின் குறித்த இளைஞன் ஆசிரியை மற்றும் இருவரால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கடந்த வாரம் பொலிஸார் சந்தேக நபரான ஆசிரியையின் கணவர் மற்றும் முகாமையாளரை கைது செய்தனர்
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்களை மே 14 ஆத் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் சந்தேக நபரான ஆசிரியை வீட்டை விட்டு ஓடிச்சென்று தலைமறைவாகியுள்ளதாகவும் அவரது அனைத்து தொலைபேசி தொடர்புகளும் துண்டித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
