பாவங்களில் இருந்து விடுபட செய்யும் “சித்ரா பௌர்ணமி” தினம் இன்று!

கடந்த கால பாவங்களில் இருந்து விடுபடவும், புண்ணிய பலன்களை அதிகரிக்கச் செய்வதற்கும் உரிய நாளாக சித்ரா பௌர்ணமி தினம் விளங்குகிறது.

இந்து மதத்தில், வழிபாட்டிற்கு முக்கியமான நாளாக பௌர்ணமி கருதப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினம் வந்தாலும், சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரம் இணைந்த நாளில் வரும் பௌர்ணமி தினம் தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது.

இந்த நாளில் சித்ரகுப்தரை வழிபடுவதுடன், குறிப்பிட்ட சில தானங்களைச் செய்வதால், இந்த பிறவியில் மட்டுமல்ல இதற்கு முந்தைய ஏழு பிறவிகளிலும் செய்த பாவங்களில் இருந்து விடுபட முடியும் என இந்துக்கள் நம்புகின்றனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.47 க்கு ஆரம்பமாகிய சித்ரா பௌர்ணமி இன்று திங்கட்கிழமை இரவு 10.45 க்கு நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது