திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையின் சிற்றூழியர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்-

கோப்பாய் வைத்தியசாலையில் பணிபுரிந்துவந்த சிற்றூழியர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்தார்.

நீர்வேலியை சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் திடீர் சுகவீனமுற்ற நிலையில், உறவினர்கள் அவரை கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை  உயிரிழந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

இதய நோய் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.