
போக்குவரத்து சபையின் முன்னாள் பிரதித்தலைவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது
இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் பிரதித் தலைவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
கதிர்காமம் பகுதியில் உள்ள ராஜபக்ச குடும்பத்திற்கு சொந்தமானதாகக் கூறப்படும் வீடு தொடர்பான விசாரணைகளுக்கமைய இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் பிரதித் தலைவர் எல்.ஏ.விமலரத்ன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்