பாகிஸ்தான் விமானப்படை பெற்ற பி. எல்-15 ஏவுகணை

இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரிக்கும் நிலையில், பாகிஸ்தான் விமானப்படை (PAF) சீனாவின் மிகவும் உயர்தரமான                    பி. எல்-15  (PL-15) ஏவுகணைகளை அவசரமாக பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் விமானப்படை, தற்போது தனது புதிய ஜெ எப் -17 பிலொக் III  (JF-17 Block III) போர்விமானங்களில் பி. எல்-15 பியொன்ட் விசுவல் ரேன்ஜ் (PL-15 Beyond Visual Range (BVR) ) ஏவுகணைகளை களஞ்சியப்படுத்தியுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

பி. எல்-15 (PL-15 ) ஏவுகணைகள், 200 – 300 கிமீ வரையான மிக நீண்ட தூரத்தை அடையக்கூடியவை. இது பாகிஸ்தான் விமானப்படைக்கு இந்திய விமானப்படையை (IAF) அதிக தொலைவில் இருந்து தாக்கும் திறனை வழங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சீனாவின் பி. எல்-15 (PL-15), அமெரிக்காவின் ஏஐஎம் 120 டீ  (AIM-120D) மற்றும் ஐரோப்பியாவின் மீடியர் (Meteor) ஏவுகணைகளுடன் ஒப்பிடப்படுகிறது.

மீடியர் (Meteor) ஏவுகணைகளை இந்தியா தனது ரஃபேல் விமானங்களில் ஏற்றியுள்ளது. இருப்பினும், பி. எல்-15 (PL-15) ஏவுகணைகள் விரைவான வேகத்தையும் நீண்ட இலக்குகளை தாக்கும் திறனையும் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த அபாயத்திற்கு எதிராக, இந்திய விமானப்படை ரஷ்யாவின் ஆர் -37 எம் (R-37M) ஏவுகணைகளை வாங்கும் திட்டத்தை பரிசீலிக்கிறது. இந்த ஏவுகணைகள் 300-400 கிமீ தூரத்தில் இலக்குகளை தாக்க முடியும்.

இதற்கிடையில், இந்தியா தனது உள்நாட்டு அஸ்திரா எம்கே III  {(Astra) Mk-III }திட்டத்தையும் விரைவில் நிறைவேற்ற முயற்சிக்கிறது. புதிய அஸ்திரா ஏவுகணை 340 கிமீ தூரத்தில் இலக்குகளை தாக்கும் திறன் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றம் மேலும் அதிகரிக்கும் சூழ்நிலையில், இரு நாடுகளும் தங்கள் ஆயுதங்களைக் கொண்ட ஆக்கிரமிப்பு வலிமையை மேம்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்