பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் இறுதி நல்லடக்க ஆராதனை இன்று!

பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் இறுதி நல்லடக்க ஆராதனை இன்று சனிக்கிழமை நடைபெறுகிறது.

இறுதி நல்லடக்க ஆராதனையில் 200,000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே 128,000 க்கும் அதிகமானோர் புனித பேதுரு பேராலய சதுக்கத்திற்குள் பிரவேசித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் மறைவையொட்டி நேற்று வெள்ளிக்கிழமை முதல் வத்திக்கானில் 9 நாட்கள் துக்கதினம் அனுஷ்டிக்கப்படுகிறது.