மட்டக்களப்பு உட்பட 18 மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை
மட்டக்களப்பு உட்பட 18 மாவட்டங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை இரவு 11 மணி வரை கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, மொனராகலை, அம்பாறை, பதுளை, நுவரெலியா, கேகாலை, கண்டி, மாத்தளை, பொலன்னறுவை, அனுராதபுரம், திருகோணமலை, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு உயர் மட்ட சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக உள்ளூர்மயமாக்கப்பட்ட பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்