ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பொன்னியின் செல்வன் படக்குழுவிற்கு 2 கோடி அபராதம்

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பொன்னியின் செல்வன் படக்குழுவிற்கு டெல்லி உயர்நீதிமன்றம், இந்திய மதிப்பில் ரூபாய் 2 கோடி அபராதம் விதித்துள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்பட விவகாரம் தொடர்பில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படத்தில் உள்ள பாடல் ஒன்று தனது தந்தை மற்றும் உறவினர் இசையமைத்த பாடலின் பிரதியாக இருப்பதாகக் கூறி கர்நாடகாவைச் சேர்ந்த பாடகர் ஹயாஸ் ஜாபர் என்பவர் மனுத் தாக்கல் செய்தார்.

அந்த மனு மீதான விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த பாடல் பிரதி செய்யப்பட்ட சாயலில் உள்ளதாகத் தெரிவித்து ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட படக்குழு தரப்பினர் இந்திய மதிப்பில் ரூ.2 கோடியைச் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்