
பாகிஸ்தானியர்களை 48 மணி நேரத்துக்குள் நாட்டைவிட்டு வெளியேறுமாறு இந்தியா உத்தரவு
காஷ்மீரில் நேற்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சில தீர்மானங்களை எடுத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, பாகிஸ்தானியர்களுக்கான சார்க் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஆலோசகர்களின் பதவிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இரு உயர்ஸ்தானிகராலயங்களின் அலுவலர்களின் எண்ணிக்கையும் 55 இல் இருந்து 30 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியா தனது பாதுகாப்புப் படைகளை “உயர் விழிப்பு நிலையில்” வைத்துள்ளது.
அத்துடன், சார்க் வீசாவில் இந்தியாவில் தங்கியுள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் 48 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என இந்தியா உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்