
அழகு நிலையங்களுக்கு செல்லாமலேயே முகத்தை பளிச்சென்று மாற்றும் மந்திரம் வீட்டிலேயே உள்ளது. அதுதான் ஐஸ்கட்டிகள். வெறுமனே ஐஸ் கட்டிகள் கூட முகத்திலுள்ள அழுக்குகளைப் போக்க உதவும்.
அதில் வெள்ளரிக்காய், கற்றாழை, ரோஸ் வோட்டர், எலுமிச்சை சாறு, தேன், கோப்பித் தூள், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை சேர்த்து விதவிதமான ஐஸ் கட்டிகளை தயாரித்து முகத்தை பளபளப்பாக மாற்ற முடியும்.
எலுமிச்சை சாறு – தேன் ஐஸ் கட்டி
இரண்டு கரண்டி எலுமிச்சை சாறு, அரை கரண்டி தேன் கலந்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதனுடன் சம அளிவிலான நீர் சேர்த்து ஐஸ் கட்டியாக மாற்றியதும் அதனை எடுத்து மெல்லிய துணியொன்றினால் சுற்றி முகத்தில் வைத்து மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
கற்றாழை – வெள்ளரிக்காய் சாறு ஐஸ் கட்டி
கற்றாழை சாற்றுடன் சிறிய அளவிலான முழு வெள்ளரிக்காயை தோல் சீவி ஜூஸாக்கி ஒரு கரண்டி கற்றாழை சாற்றுக்கு ஒரு கரண்டி வெள்ளரிக்காய் ஜூஸ் கலந்து சிறிதளவு நீர் சேர்த்து ஐஸ் கட்டியாக மாற்ற வேண்டும்.
கோப்பித்தூள் – தேங்காய் எண்ணெய் ஐஸ் கட்டி
ஒரு கிண்ணத்தில் நீர் சேர்த்து அதில் இரண்டு கரண்டி தேங்காய் எண்ணெய் கலந்து ஃப்ரீசரில் வைத்து கட்டியானது அதனை ஒரு மெல்லிய துணியில் சுற்றி முகத்தில் வைத்து மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
ஒரேஞ்ச் சாறு – புதினா சாறு ஐஸ் கட்டி
ஒரேஞ்சை உரித்து ஜூஸாக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் புதினா இலைகளை எடுத்து அதனையும் அரைத்து சாறு எடுத்து, இரண்டையும் ஐஸ் கட்டியாக மாற்றியபின் அதனையொரு மெல்லிய துணியில் சுற்றி முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
Beta feature
Beta feature
Beta feature
Beta feature