கிளிநொச்சி மாவட்டத்தில் 3865 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி

-கிளிநொச்சி நிருபர்-

உள்ளூர் அதிகார சபைத்தேர்தல் 2025ஆம் ஆண்டு தபால் மூல வாக்களிப்பு நாளை வியாழக்கிழமை முதல் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை மற்றும் பூநகரி ஆகிய மூன்று பிரதேச சபைகளிலும் தபால் மூலம் 3865 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

உள்ளூராட்சி சபை தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் 102387 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை மாவட்டத்தில் மூன்று சபைகளிலும் 66 பேரை தெரிவு செய்வதற்காக 659 பேர் போட்டியிடுகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க