
பேராதனையில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது
கண்டியில் சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் கண்டி – பேராதனை, முருதலாவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பேராதனை, முருதலாவ பிரதேசத்தில் வசிக்கும் 67 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 200 வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பேராதனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
