கொழும்பில் 4 ஆயிரம் வாகன சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை
கொழும்பு நகரில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி. கமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சி.சி.ரி.வி. கமராக்கள் ஊடாக போக்குவரத்து விதிமீறல்களை மேற்கொள்ளும் சாரதிகளுக்கு அபராத பத்திரங்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பொருத்தப்பட்ட சி.சி.ரி.வி. கமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறியும் திட்டம் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி அன்று ஆரம்பிக்கப்பட்டது.
அதன்படி, இம்மாதம் 20 ஆம் திகதி போக்குவரத்துச் சட்டங்களை மீறியதற்காக 4,048 சாரதிகள் மீது தண்டப்பணம் விதித்தல் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வேலைத்திட்டம் தொடர்ந்து முன்னெடுத்து செல்லப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க உறுதியளித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
