
கிழக்கு ஆளுநர் திருகோணமலை பிரதேச வைத்தியசாலைக்கு கண்காணிப்பு விஜயம்
-கிணணியா நிருபர்-
திருகோணமலை மாவட்ட கோமரங்கடவல பிராந்திய மருத்துவமனை மற்றும் பிரதேச சபைக்கு நேற்று திங்கட்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது கோமரங்கடவல பிராந்திய மருத்துவமனையில் உள்ள பிரச்சினைகள் ஆராயப்பட்டு அந்தப் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
குறித்த பிரச்சினைகளைத் தீர்க்க குறித்த பிரதேசத்தில் உள்ள அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து தேவையான நடவடிக்கைகளும் இதன் போது எடுக்கப்பட்டன.
மேலும் இந்த விஜயத்தின் போது திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கோமரங்கடவல பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமாகிய ரொஷான் கலந்துகொண்டார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
