கல்முனை மாநகர பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் அழைப்பின் பேரில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் விஜயம்
கல்முனை மயோன் பிளாஸா மண்டபத்தில் சனிக்கிழமை வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஏற்பாட்டில் உலர் உணவுப் பொதிகள், இளைஞர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரின் வேண்டுக்கோள்க்கு இணங்க, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு பாஹிமுல் அஸீஸ் அவர்கள் கல்முனைக்கு விஜயம் மேற்கொண்டு அவரது கரத்தினால் பொருட்களை பயனாளர்களுக்கு வழங்கி இந்நிகழ்வை சிறப்பித்தார்.
அதிதிகளான பாகிஸ்தானிய இலங்கைக்கான ஆலோசகர் நுஃமான் ரஷீட் ஹயானி, கல்முனை சமூக சேவை உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜெய்ஸான், கல்முனை சிவில் சமூக சேவை பொலிஸ் பொறுப்பதிகாரி எம். வாஹித், மற்றும் நூதுவரின் பாரியாரும் மற்றும் ஊடகவியலாளர்கள், பவுண்டேசன் உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்