
தந்தையின் கவனயீனத்தால் பறிபோன குழந்தையின் உயிர்!
தந்தையின் அவதான குறைவால் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளிநொச்சி அம்பாள் குளம் பகுதியின் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது
இதன்போது ஒன்றரை வயது நிரம்பிய தவக்குமார் சிந்துஜன் என்ற குழந்தை உயிரிழந்துள்ளது.
குழந்தை விளையாடிக்கொண்டிருந்ததை அவதானிக்காத தந்தை, தனது டிப்பர் வாகனத்தை பின்புறமாக ஓட்டிய போது வாகனத்தில் சிக்குண்டு குழந்தை உயிரிழந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
