நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற இளைஞன் மாயம்

கண்டி – நாவலப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலபொட எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற இளைஞன் நேற்று வியாழக்கிழமை நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.

வெஸ்ட்ஹோல் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே காணாமல் போயுள்ளார்.

குறித்த இளைஞன் தனது நண்பர்களுடன் நீராட சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்