விசாரணைகளின் போது கைப்பற்றப்பட்ட கூர்மையான ஆயுதங்கள், தோட்டாக்கள்

பொலிஸ் காவலில் உள்ள சந்தேகநபர் தெரிவித்த தகவலின்படி, ரி56 துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் 50 தோட்டாக்களையும், கூர்மையான ஆயுதத்தையும் அதுருகிரிய பொலிஸார் மீட்டுள்ளனர்.

அதுருகிரிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 12 ஆம் திகதி அதுருகிரிய பொலிஸ் அதிகாரிகள் குழுவால் குறித்த சந்தேகநபர் 11 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

பின்னர் சந்தேகநபர் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைத்து விசாரணை நடத்திய போது இந்த வெடிமருந்துகள் மற்றும் கூர்மையான ஆயுதங்கள் நேற்று வியாழக்கிழமை மீட்கப்பட்டன.

சம்பவம் தொடர்பில் அதுருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்