யாழ். மாவட்ட மெய்வல்லுனர் சங்கம் நடாத்தும் வீதியோட்டப் போட்டி

யாழ். மாவட்ட மெய்வல்லுனர் சங்கம் நடாத்தும் வீதியோட்டப் போட்டி எதிர்வரும் 19ஆம் திகதி சனிக்கிழமை காலை 6 மணிக்கு யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.

15 வயதிற்குட்ட ஆண், பெண் போட்டியாளர்களுக்கு 7 கிலோ மீற்றர் தூரமும் 15 வயதிற்கு மேற்பட்ட போட்டியாளர்களுக்கு 21 கிலோ மீற்றர் தூரமும் வீதியோட்டம் இடம்பெறவுள்ளது.

பங்குபற்றும் போட்டியாளர்கள் மருத்துவச் சான்றிதழ் எடுத்துவருதல் அவசியாகும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்