ஓரிரு தினங்களில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மைகளை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்!

-கிண்ணியா நிருபர்-

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மைகளை ஓரிரு தினங்களுக்குள் வெளிப்படுத்த வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக காணப்படுகிறது, என பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

திருகோணமலை நிலாவெளி பகுதியில் இன்று வியாழக்கிழமை மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தேர்தல் காலத்தில் அரசாங்கம் சொன்னதை போன்று செயற்பட வேண்டும், அநியாயமாக கைதானவர்களை விடுவிக்கப்பட்டு சரியான விமோசனம் கிடைக்க வேண்டும்.

குச்சவெளி பிரதேசத்தில் ஒன்று பட்டு ஒற்றுமையாக வாக்களித்தால் மக்கள் காங்கிரஸின் ஊடாக அதிகளவான ஆதரவை பெற்றுக் கொள்ளும் என நம்புகிறோம், தமிழ் முஸ்லீம் மக்களின் ஒற்றுமை ஊடாக பிரதேச சபை ஆட்சியை அமைக்கலாம், என்றார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்