உள்நாட்டு பசும்பால் மற்றும் யோகட்டுக்கான வெட் வரி நீக்கம்

வெட் வரி திருத்தச் சட்டமூலத்தின் படி, ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் திரவப் பால் மற்றும் தயிர் ஆகியவை வெட் வரியிலிருந்து நீக்கவுள்ளதாக தேசிய வருமான வரி திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

தேசிய வருமான வரி திணைக்கள அறிவுப்புக்கு அமைவாக, புதிய பால் குறைந்தபட்சம் நூற்றுக்கு 50 சதவீதம் இருக்க வேண்டும் என்றும் வெட் வரி திருத்த மசோதா ஏப்ரல் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன ஏப்ரல் 11 ஆம் திகதி கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்தார்.

அதன்படி, தொடர்புடைய சட்டம் குறித்த திகதியில் அமுலுக்கு வந்ததிலிருந்து, தேசிய வருமான வரி திணைக்களம் பல வரித் திருத்தங்களைச் செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

திரவ பால் மற்றும் தயிர் தவிர, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தால் மின்சார உற்பத்திக்காக இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படும் ஹைட்ரோ கார்பன்களின் கலவையைக் கொண்ட (நெப்தா) மீதான வெட் வரியும் நீக்கப்பட்டுள்ளதாக தேசிய வருமான வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்