திருகோணமலையில் காற்றுடன் கூடிய மழை

-மூதூர் நிருபர்-

திருகோணமலை மாவட்டத்தின் பல இடங்களில் இன்று வியாழக்கிழமை பகல் வேளையில் காற்றுடன் கூடிய மழை பெய்ததை அவதானிக்க முடிந்தது.

தற்போது திருகோணமலையில் உள்ள பல இடங்களில் பெரும்போக வேளாண்மைச் செய்கைக்கான விதைப்பு நடவடிக்கைகள் இடம் பெற்று வரும் நிலையில் மழை பெய்தமையினால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்