வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளுடன் நால்வர் கைது!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டு தொகையை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த நான்கு விமானப் பயணிகளை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்த நான்கு பயணிகளும் இன்று திங்கட்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் 26, 28 மற்றும் 35 வயதான கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் கொண்டு வந்த 560,000 சிகரெட்டுகள் அடங்கிய 2,800 சிகரெட் அட்டைப்பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றின் பெறுமதி 08 கோடி ரூபாய்க்கு மேல் என்றும் சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சிகரெட் தொகையுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் குறித்து சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க