மாவடிப்பள்ளி பாலத்தில் வாகன நெரிசல்
-அம்பாறை நிருபர்-
மாவடிப்பள்ளி பாலத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட விபத்து காரணமாக வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி ஒடுங்கிய பாலம் உள்ள பகுதியில் நேருக்கு நேர் பேருந்தும் முச்சக்கரவண்டியும் நெருக்குண்டு விபத்திற்குள்ளாகின.
இதனால் குறித்த பாலத்தில் இரு வாகனங்களும் சிக்கிக்கொண்டதுடன் அம்பாறையில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த வாகனங்களும் கல்முனை அக்கரைப்பற்று பகுதியில் இருந்து அம்பாறை நோக்கி மாவடிப்பள்ளி ஊடாக பயணிக்க முற்பட்ட சகல வாகனங்களும் இச்சம்பவத்தினால் போக்குவரத்து செய்ய முடியாமல் 1 கிலோ மீட்டர் தூரம் வரை தரித்து நின்றன.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த காரைதீவு பொலிஸார் உள்ளிட்ட உரிய அதிகாரிகள் குறித்த விடயங்களை சீராக்கியதுடன் தொடர்ந்தும் குறித்த பாலத்தின் ஊடாக ஏனைய வாகனங்கள் செல்வதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டதனை அவதானிக்க முடிந்தது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
