நித்தியானந்தா இறந்துவிட்டாரா?
நித்தியானந்தா இறந்துவிட்டதாக வெளியான காணொளி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நித்தியானந்தாவின் சகோதரியின் மகனே குறித்த காணொளியை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த காணொளி வெளியாகியதையடுத்து அவரை பின்பற்றும் சிலர் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும்,அவர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படும் தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
நித்தியானந்தாவின் சகோதரி மகன், நித்தியானந்தா ஜீவசமாதி அடைந்துவிட்டதாகக் காணொளி ஒன்றில் தெரிவித்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதே நேரம் இது, ஏப்ரல் முதலாம் திகதியான நேற்று செவ்வாய்க்கிழமை உலக முட்டாள்கள் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட வதந்தியாக இருக்கலாம் எனவும் சிலர் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் இதேபோல் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்