
ஏப்ரல் 15 முதல் வரி செலுத்துவோர் அடையாள எண் கட்டாயம்
மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்திலிருந்து (DMT) அனைத்து சேவைகளையும் பெறுவதற்கு வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 15 முதல் வரி செலுத்துவோர் அடையாள எண் சமர்ப்பிப்பதற்கான தேவை அமல்படுத்தப்படும் என்று மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க அறிவித்துள்ளார்.
அதன்படி, தனிநபர்கள் னுஆவு சேவைகளை அணுகும்போது அந்தந்த கருமபீடங்களில் தங்கள் வரி செலுத்துவோர் அடையாள எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்.
