
மானிய உதவிக்கு தெரிவாகியுள்ள 25 தொழில் முயற்சியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜேர்மன் கூட்டமைப்பு வெளியுறவு அலுவலகத்தின் நிதியுதவியுடன் “இலங்கையில் சமூக ஒற்றுமை மற்றும் சமாதானத்தை வலுப்படுத்துதல்” எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், ஜி.ஐ.சட் நிறுவனமானது கிரிசாலிஸ் உடன் இணைந்து உள்வாங்களுடனான சமூகங்கள் மற்றும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் எனும் எஃப்.ஐ.சி.இ (Fostering Inclusive Communities and Economies) நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 5 மாவட்ட்களில் ஒன்றான மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நுண்ணிய, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியில் ஈடுபடும் வியாபார நிறுவணங்களிலிருந்து (MSMEs), இவ் எஃப்.ஐ.சி.இ திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டு, மானிய உதவிக்கு தெரிவாகியுள்ள 25 தொழில் முயற்சியாளர்களுக்கு கடந்த 27 ஆம் திகதி சான்றிதழ் வழங்கும் விழாவானது மட்டக்களப்பு கல்லடியிலுள்ள கிறீன் கார்டின் ஹோட்டலில் இடம் பெற்றது.
இச் சான்றிதழ் வழங்கும் விழாவினை, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் சுதர்ஷினி ஸ்ரீகாந் தலைமை தாங்கி சிறப்பித்தார். அவர் சிறப்புரையாற்றுகையில்,
“கிரிசாலிஸ் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படும் இந்த எஃப்.ஐ.சி.இ திட்டமானது, சமூக நல்லிணக்கம் மற்றும் ‘உள்வாங்கல் எனும் கருப்பொருட்களைக் கொண்டிருப்பது. இத்திட்டத்தின் சிறப்பம்சங்களாகும். இத்திட்டத்தின் எண்ணக்கரு, எமது மாவட்டத்திற்கும் மிகவும் பொருத்தமான ஒன்றாகும். இவ்வாறான திட்டங்கள் ஏனைய பிரதேசங்களுக்கும் பரவலாக்கப்பட வேண்டும். மேலும், எமது அரச உத்தியோகத்தர்களும், கிரிசாலிஸ் இன் இத் திட்ட மாதிரியை பயன்படுத்தும் போது. மிகவும் வித்திறனான சிறந்த தொழில் முற்சியாளர்களுக்கு உதவி செய்வதோடு, அவர்களுக்கும் சமூகம் தொடர்கான ஒரு பாரிய பொறுப்பை வகுக்க முடியும்” என கருத்துத் தெரிவித்திருந்தார்.
மற்றும் ஜி.ஐ.சட் சார்பாக, எஃப்.ஐ.சி.இ திட்ட முகாமையாளர் திரு நவேந்த லியன ஆராய்சிசி சிறுத்து விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகளை வளர்சிக்காக பணிபுரிகின்ற அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.









Beta feature
Beta feature
Beta feature
Beta feature
Beta feature
Beta feature
Beta feature
Beta feature
Beta feature
Beta feature

