
லாஃப்ஸ் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு!
லாஃப்ஸ் எரிவாயுவின் விலை இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுகிறது
இதற்கமைய 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் எரிவாயு கொள்கலனின் விலை 420 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது, இதன்படி, அதன் புதிய விலை 4,100 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 168 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது, இதற்கமைய, அதன் புதிய விலை 1,645 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
